தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர், தூரிகையாளர், மாந்தநேயமிக்கவர் என பன்முகங்களைக் கொண்ட ஓவியர் வீரசந்தானம் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ் உணர்வாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் "ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று மாலை (13-07-2017)திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார் என்னும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் நாடுபோற்றும் தலைசிறந்த ஓவியப் படைப்பாளர். கண்ணைக் கவரும் கலைநயம் சிந்தும் கருத்தாழம் மிக்க கோட்டோவிங்களைப் படைப்பதில் வல்லவர். அவர் ஒரு ஓவியக் கலைஞராக மட்டுமின்றி, அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கியவர். தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடியவர். விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தமிழ்த்தேசியப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நின்றவர். உலகத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர். விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்த "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்" அனைத்துப் போராட்டக் களங்களிலும் மிகவும் தீவிரமாகப் பங்கேற்றவர். சிங்கள இனவெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் பேரவலத்தைச் சித்தரிக்கும் 'முள்ளிவாய்க்கால் முற்றம்' என்னும் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அவருடைய இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
Showing posts with label உணர்வாளராக. Show all posts
Showing posts with label உணர்வாளராக. Show all posts
Recent Posts
Popular Posts
-
உ லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கி...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிக...
-
PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. VINCENT MOHANKUMAR
-
ஆங்கிலத்தில் பே ச இத்தளத்தில் இணையவேண்டும்.நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல ...
-
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள் அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ...
-
எதைப்பற்றி எழுதுவது என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது கணணியை திறந்தேன். அழகான தோற்றத்தில் உங்களது பேசும் உருவத்தை உருவாக்க...
-
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அ...
-
உலகம் எல்லாம் அன்னையே போற்றுகின்றது முதன்முதலில் பார்ப்பது உன் முகமே ! மனிதனை உருவாகுவதும் நீயே இரவும் பகலும் உறங்காமல் பார்பவளும் நீயே...