வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஞ்ஞானிகள் Gliese 832c என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை நாம் தொடர்பு கொண்டால், நமக்குத் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், நிச்சயமாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சிக்னல் வரும்.
ஆனால் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதில் தான் சாமர்த்தியம். வேற்றுகிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய அழிவை தவிர்க்க முடியும்.அவர்களும் நம்மைப் போன்று தான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே முயல்வார்கள், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம்.
ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recent Posts
Popular Posts
-
தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி...
-
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் அன்பே அன்பே எங்குள்ளதோ அங்கே அங்கே நான் இருப்பன் ஒளியின...
-
பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உள்ள வழக்கமான கவலை தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் வந்துள்ளது. அண்மையில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அ...
-
கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம். எதையும் எ...
0 comments:
Post a Comment