பல மொழிகள் பேச வேண்டுமா ?????????
அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம். உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இலகு உங்களுக்குரிய மொழியைத் தெரிவு செய்து
உங்களுக்கு வேறு மொழி தெரிந்தால் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கலாம். மேலதிகமாகப் படிக்க பணம் செலுத்தத் வேண்டும். பணம் செலுத்திப் படித்தால் சான்றிதழ்கள் கூட
வழங்கப்படும். இங்கே நான் பார்த்தளவில் தமிழ் மொழி பலராலும் கற்பிக்கப்-
படுகின்றது. அது ஆங்கிலம் மூலமாகவே கற்பிக்கின்றார்கள்.
காணொளி டெமோ
அது தமிழ் பேச முடியுமே தவிர, தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியாது ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம்.
காணொளி டெமோ
அது தமிழ் பேச முடியுமே தவிர, தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியாது ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம்.
யூ டியூப்" இணையதளத்தில் ஒரு நாள் கவர்னர்
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான்.
திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும்
என தனது ஆசையை தெரிவித்தான். உடனே அவனது தாய் நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.
வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால் சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.
இச்சம்பவம் அனைத்தும் "யூடியூப்" இணையதளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.
ஆகவே அவனை நியூஜெர்ஸி மாகாணத்தின் ஒருநாள் கவர்னர் ஆக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் சிறுவன் ஜெஸ்சி சாக்சான் ஒரு நாள் கவர்னராக பதவி வகித்தான். இதை அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும்
என தனது ஆசையை தெரிவித்தான். உடனே அவனது தாய் நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது.
வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால் சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார்.
இச்சம்பவம் அனைத்தும் "யூடியூப்" இணையதளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பானது. அதை நியூஜெர்சி மாகாணத்தின் தற்போதைய கவர்னர் கிரிஸ் கிறிஸ்டி பார்த்தார். இதை தொடர்ந்து அச்சிறுவனின் ஆசையை தீர்த்து வைக்க விரும்பினார்.
"முதல்வன்" சினிமா படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல் அமைச்சராவது போல் நடித்து இருந்தார். ஆனால் அமெரிக்காவில் 4 வயது சிறுவன் உண்மையிலேயே ஒரு நாள் கவர்னராக பதவி வகித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.
குறிப்பு : நீங்களும் முதலமைசர் ஆக விரும்பினால் யூடியூப்" இணையதளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பாதிங்க அப்புறம் உங்களை ஜெயிலல போடுவாங்க கவனம்!!! அதுக்கு நான் பொறுப்பு இல்ல
சிலந்தியின் இனப்பெருக்கம்
பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன.
அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை.
முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது. அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவுகளை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும் பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது.
எனினும் சில சமயங்களில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சில இளஞ்சிலந்திகளை தனியாக வைத்திருந்தனர். இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில் ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
அவ்வாறு இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது. இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா? என ஆராய்ந்ததில் ஆம் என்பதே பதிலாக இருந்தது.
ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர் ப்ரூட் தெரிவித்தார்

ஏரளமான மருத்துவ குணங்கள் !!!!!!!!!!!!
கடுகிற்கு ஏரளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிகவும் உதவும்.
தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு வெண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் வாந்தி மூலம் விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அறைத்து உட்கொள்ள இருமல், ஆஸ்துமா, கபம் குணமாகும்.
ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது!!!!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.
1. தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
2. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
3. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
4. நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.
5. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும் தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
6. நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விடயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சி !!!!!!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்ட கால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார்.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரஸ்தாப விடயத்துக்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். அவர்கள் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
ஆனாலும் வொயிப் தொழில்நுட்பத்தின் அடிநுனி தெரியாத பாதுகாப்புச் செயலாளர் பெருமளவு பணத்தை அநியாயமாக வாரியிறைக்கப் போவதாகவே தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்வின்

Recent Posts
Popular Posts
-
உ லக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கி...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிக...
-
PROPHETIC EVANGELISTIC MEETING - BRO. VINCENT MOHANKUMAR
-
ஆங்கிலத்தில் பே ச இத்தளத்தில் இணையவேண்டும்.நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல ...
-
அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள் அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ...
-
எதைப்பற்றி எழுதுவது என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது கணணியை திறந்தேன். அழகான தோற்றத்தில் உங்களது பேசும் உருவத்தை உருவாக்க...
-
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அ...
-
உலகம் எல்லாம் அன்னையே போற்றுகின்றது முதன்முதலில் பார்ப்பது உன் முகமே ! மனிதனை உருவாகுவதும் நீயே இரவும் பகலும் உறங்காமல் பார்பவளும் நீயே...