உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Recent Posts
Popular Posts
-
நைல் நதி போன்ற உன் கூந்தல் மீன்கள் போன்ற உன் கண்கள் ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு வரி குதிரை படுத்து உறங்குவது போன்ற உன் உதடுகள் பனி துளி போன்ற ...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
Big boss vijay tv show மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ? இதன் பிண்ணனி என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்...
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 21st Day Fasting Prayer- Part 2- March 18, 2016
0 comments:
Post a Comment